×

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

வலங்கைமான், மார்ச்8: வலங்கைமான் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாமாக இறந்தார். வலங்கைமான் அடுத்த மணலூர் ஊராட்சி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் வேலன்(27). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று அப்பகுதியில் வயல்களில் நெல் மூட்டை ஏற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. உடனே அவரை பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Valangaiman ,
× RELATED வலங்கைமான் தாலுகாவில் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்