×

மானைக்கால் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி, மார்ச் 8: திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற செட்டித்தெரு மானைக்கால் மகாமாரியம்மன் கோயில் 63வது ஆண்டு திருவிழா கடந்த 28ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இந்நிலையில் நேற்று முக்கிய திருவிழாவான காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல் இதர கணிக்கை செலுத்துதல் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags : Timithi Festival ,Manaikkal Mariamman Temple ,
× RELATED திருவாரூர் அருகே தென்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா