நடை பாலம் அமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் அதிராம்பட்டினத்தில் மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி

அதிராம்பட்டினம், மார்ச் 8: அதிராம்பட்டினத்தில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள துர்கா செல்லியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் வகித்தனார். வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்படும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் செயல்படும் விதம் குறித்தும் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர், அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகையானது தொடர்ந்து. அதிராம்பட்டினம் சரகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>