பாபநாசம் அடுத்த பாலக்கரையில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி

பாபநாசம், மார்ச் 8: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பாலக்கரை கும்பகோணம் - திருவையாறு மெயின் சாலை என்பதால் தினமும் அரசு, தனியார் பேருந்துகள், லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பாலக்கரையில் மெடிக்கல் ஷாப், மளிகை கடை, டீக் கடை, ஸ்டுடியோ, உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் பாலக்கரையில் சாலையோரம் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு நிரம்பி சாலையில் வழிந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வணிகர்களும் துர்நாற்றத்தால் சிரமப்பட்டனர். எனவே இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>