பாபநாசத்தில் பாமக கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம், மார்ச் 8: பாட்டாளி மக்கள் கட்சி பாபநாசம் நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உழவர் பேரியக்க மாவட்ட செயலர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலர் ராஜா வரவேற்றார். இதில் பாலாஜி, அசாருதீன், கார்கில், நரேஷ் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் தொடங்கி அய்யம்பேட்டை வரை சாலையை அகலப்படுத்தி தரமாக தார்சாலை போட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாபநாசம் நகர தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories:

>