நன்றி குங்குமம் டாக்டர்
சாம்பல் பூசணி
*சாம்பல் பூசணி உடலை பலப்படுத்தும் தன்மை கொண்டவை.நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்தும்.
*உடல் பருமனை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
*வலிப்பு நோய்களுக்கு நல்ல தீர்வு.
*உடலின் வெப்பம் தணிக்கவும் உதவும்.
அவரைக்காய்
*அவரைக்காய் வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் பித்தம் குறையும்.
*அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
*ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
*சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
கத்தரிக்காய்
*கத்தரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் உள்ளது. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்னைகள் அகன்று விடும்.
*நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 காணப்படுகின்றன.
*இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது.
*வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
*வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், மலச்சிக்கல், தொண்டைக்கட்டு, கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.
*மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த வல்லது.
*மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவைகளையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட்
*கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
*தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
*நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் கேரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.
*குடல்வால் நோய் வராது. கல்லீரல் மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் கேரட் ஜூஸ் நல்ல மருந்து.
*மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.
தொகுப்பு: – ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
