உலக மகளிர் தினம் மாமல்லபுரத்தில் பெண்களுக்கு இலவசம்

மாமல்லபுரம்: உலக மகளிர் தினத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் பெண்கள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய புராதன சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு தலா ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600 என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>