ஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டோர் புகார் செய்யலாம்: எஸ்பி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்பி சண்முகபிரியா விடுத்துள்ள அறிக்கை: காஞ்சிபுரம், இந்திரா நகரில் சிவமூர்த்தி, அவரது மனைவி தமிழ்ச்செல்வி, சீனிவாசன், வசந்தா ஆகியோர் 40க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் வசூலித்த சுமார் ரூ.1 கோடிக்கும் மேலான பணத்தை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து காஞ்சிபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த துளசிராமன் என்பவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், மோசடியில் சம்பந்தப்படட் 4 பேர் குறித்து தகவல் தெரிந்தாலோ, வேறு யாரேனும் அவர்களிடம் ஏலச்சீட்டு பணம் கட்டி ஏமாற்றப்பட்டு இருந்தாலோ காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு, 30, காந்தி நகர் முதல் தெரு, கலெக்டர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் என்ற முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>