×

அமைச்சர் ஷாஜகானை கண்டித்து திமுக போஸ்டர்

தஞ்சாவூர்: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஷாஜகான், வாணியம்பாடியில் சையது பரூக் பாட்ஷா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தவெக அரசுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்தயைடுத்து, சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஷாஜகான் பதவியேற்றார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஷாஜகான், ‘‘திமுக துடைத்தெறியப்படும். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் ஷாஜகானை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க கோரியும் திமுக சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டரில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! பாபநாசம் தொகுதியில் திமுக தயவில் வெற்றி பெற்று திமுகவை விமர்சனம் செய்யும் “பச்சோந்தி” ஷாஜகானே! மன்னிப்பு கேள்!… மன்னிப்பு கேள்..!! பாபநாசம் வடக்கு ஒன்றியம் பேரூர் திமுக என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. திமுகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Dimuka Poster ,Minister ,Shah Jahan ,Thanjavur ,Indian Union Muslim League ,Muslim League ,Tamil Nadu ,SHAJAGHAN ,PAPANASAM ,SYEDU BARUK PATSHA ,VANYAMPADI WON ,
× RELATED கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட...