×

பலாத்கார வழக்கில் சிக்கிய நார்வே இளவரசி மகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஓஸ்லோ: நார்வே நாட்டின் இளவரசி மெட்டே-மேரிட்டின் மூத்த மகனான மேரியஸ் போர்க் ஹொய்பி (29), கடந்த 2018ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். உறக்கத்தில் இருந்த பெண்கள் மற்றும் வீட்டில் தனியாக இருந்த பெண்களை இவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்கள் எழுந்தன.

ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேரியஸ் போர்க் ஹொய்பி மீது சுமத்தப்பட்ட 40 குற்றச்சாட்டுகளில், 34 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பாலியல் பலாத்கார புகாரை மறுத்து வரும் மேரியஸ், போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியதை ஒப்புக்கொண்டார்.

Tags : Norway ,Oslo ,Marius Borg Hoyby ,Princess ,Mette-Marit ,
× RELATED பல்லாவரம் அருகே இன்று அதிகாலை கொடூரம்;...