சாதனை படைக்கும் ஏஆர்சி கருத்தரிப்பு மையம்

ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற கேள்வி கேட்ட காலமும் உண்டு. ஆனால், தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி விட்டனர். பெண்களை போற்றுவதற்காக உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் பெண்களை போற்றுவதற்காக பல்வேறு அமைப்பினர், நிறுவனத்தினர் போட்டிகள் வைத்து, வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கி மகிழ்கிறார்கள். பெண்கள் இல்லையேல் இந்த உலகமே இல்லை. ஏனெனில் அவர்கள் குழந்தையை ஈன்றெடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள். அதேநேரத்தில் இன்றைய காலக்கட்டத்தில் திருமணமான தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் எளிதாக கிடைப்பதில்லை.

இதற்காக அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளை நாடுகிறார்கள். இவ்வாறு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பது தான், ஏஆர்சி கருத்தரிப்பு மையம். மகளிர் தினத்தில் இந்த மையத்தை பற்றி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனின் இதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஒரு பெண். இவரது உழைப்பால்  இந்த மையம் தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் கிளைகளை கொண்டுள்ளது. ஏஆர்சி கருத்தரிப்பு மையம் மொத்தம் 23 இடங்களில் இயங்கி வருகிறது. இதில், தமிழகத்தில் மட்டும் 17 இடங்களில் செயல்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள் மிக குறைந்த கட்டணத்தில் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வப்போது இலவச குழந்தைப்பேறு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் தம்பதிகளுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு அவசியம். மேலும், முகாமில் கலந்து கொள்ளும் குழந்தையில்லா தம்பதிகளுக்கு மட்டும் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. இதில், டாக்டர் மகாலட்சுமி சரவணன் கலந்து கொண்டு குழந்தையில்லா தம்பதிகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்.சமீபத்தில் சேலத்தில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தில் ஐவிஎப் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தையில்லா தம்பதிகள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே ஏஆர்சி கருத்தரிப்பு மையம் சார்பில் முதல் முறையாக அன்னையர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தையில்லா தம்பதிகளின் வாழ்வில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தின் சேவை பாராட்டுக்குரியது. அதன் இயக்குனர் டாக்டர் மகாலட்சுமி சரவணனின் அர்ப்பணிப்பும் மகத்தானது. அவரது சேவை மென்மேலும் தொடர உலக மகளிர் தினத்தில் வாழ்த்துவோம்.

Related Stories: