சமூக சேவையில் புதிய சிறகுகள் அறக்கட்டளை

ேசலம் மாவட்டத்தில் பலதரப்பட்ட மக்கள், பெண்கள் வியக்கும் வகையில் சமூக அக்கறையுடன் சாதனைகள் புரிந்துவரும் புதிய சிறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் சமூக சேவகி சுமதி. இவர், பெண்கள் முன்னேற்றத்திற்காக தொழிற் பயிற்சிகள், கருந்தரங்கள், செய்முறை பயிற்சி, மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் சுயத்தொழில் செய்ய விரும்புவர்கள் அவரரின் தேவைக்கேற்ப வேலைவாய்ப்புகள் அமைத்து ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சமூகமான முறையில் தீர்வு கண்டு அவர்களை பாதுகாப்பான முறையில் வாழ உதவி செய்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பது, பிளாஸ்டிக் ஓழிப்பு துண்டு பிரசுரம் வழங்குவது, மருத்துவ உதவி போன்ற சமூக சேவைகளை திறம்பட செய்து சிங்கப்பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துக்களை மகளிருக்க கூறி புதியேதோர் உலகம் படைப்போம், புதிய சிறகுகளுடன் பறந்து, சிறகை விரிப்போம் சிகரம் தொடுவோம் என்றும் கூறினார். உறுப்பினராக இணைவோம்.

Related Stories: