பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

சேந்தமங்கலம், மார்ச் 8:கோக்கலை அடுத்த கருமகவுண்டம்பாலையத்தில் உள்ள பெருமாள், வீரமாத்தி அம்மன், நல்லையன்சாமி கோயில் கும்பாபிஷேக விழா இன்று(8ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் சாமிக்கு பால், பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்ததது. முப்போடு பொங்கல் பானையுடன், சாமி பலவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா, வாணவேடிக்கை, பூஜையுடன் தெருக்கூத்து நடந்ததது. விழா ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>