கால்நடை மருத்துவ கல்லூரி ஆண்டு விழா

நாமக்கல், மார்ச் 8: நாமக்கல்  கால்நடை மருத்துவக் கல்லூரியில், ஆண்டு விழா மற்றும் விடுதிநாள் விழா நேற்று மாலை நடைபெற்றது.விழாவிற்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசந்திரன் தலைமை வகித்து பேசுகையில், மாணவ, மாணவியர் தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தயார்படுத்தப் படுத்தபடுகிறார்கள். திறம்பட கல்வி கற்று இந்த சமுதாயத்தின் முன்னேற்றுத்துக்கு பாடுபட வேண்டும் என்றார். தொடர்ந்து சேலம் பெரியர் பல்கலைக்கழக துணை வேந்தர் குழந்தைவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். கல்லூரி முதல்வர் மோகன், விடுதி காப்பாளர் பழனிவேல், மாணவ மன்ற தலைவர் பொன்னுதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதி ஆண்டு மாணவர் சரவணன் நன்றி கூறினார். விழாவையொட்டி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories:

>