பேராசிரியர் அன்பழகனுக்கு திமுகவினர் அஞ்சலி

நாமக்கல், மார்ச் 8: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி நாமக்கல்- மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் நகர பொறுப்பாளர் மணிமாறன், பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன்,  நகர பொறுப்புகுழு உறுப்பினர்கள் அன்பரசு, சரோஜா, வழக்கறிஞர் மோகன் ராஜ், முன்னாள் பஞ்சாயத்தலைவர் ஈஸ்வரன், திமுக பிரமுகர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கௌதம் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பாபு, குமார், செந்தில்குமார், இருசப்பன், சுரேஷ்குமார், பிரபாகரன், கோபிநாத் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் நகர திமுக செயலாளர் கார்த்திகேயன்  தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது. பொறுப்புக்குழு உறுப்பினர்கள்  ராஜேந்திரன், பெருமாள், ஆறுமுகம், ரமேஷ், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர்  தாண்டவன், நகர அவைத் தலைவர் முரசொலி முத்து மற்றும் திமுக கூட்டணி  கட்சியினர் கலந்துகொண்டனர்.

குமாரபாளையம்: குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில், நகர திமுக பொறுப்பாளர் சேகர் தலைமையில், அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் காங்கிரஸ் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் படைவீடு பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் ஈஸ்வரன், வழக்கறிஞர் கார்த்திகேயன், மதிமுக விஸ்வநாதன், மக்கள் நீதி மய்யம் அறிவொளி சரவணன், தி.க சாமிநாதன், சரவணன், திராவிடர் விடுதலைக்கழகம் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் பள்ளிபாளையத்தில் நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடந்தது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ்நிலையம் அருகே, நகர செயலாளர் சங்கர் தலைமையில், மறைந்த பேராசிரியர் அன்பழகனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, நகர நிர்வாகிகள் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>