×

கறம்பக்குடி தாலுக்காவில் இன்றும், நாளையும் ஜமாபந்தி

 

கறம்பக்குடி, ஜூன் 16: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுக்கா அலுவலகத்தில் 1435 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் படி மாவட்ட தனித்துறை ஆட்சிய ர் ( சமூக நலம் பாதுகாப்பு திட்டம் ) முத்துசாமி தலைமையில் கறம்பக்குடி தாசில்தார் பிரவீனா மேரி முன்னிலையில் நடைபெற உள்ளது. அதன்படி இன்று (16 ஆம் தேதி மழையூர் சரத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும், நாளை ( 17 ம் தேதி) கறம்பக்குடி சரத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும் நடைபெற உள்ளது.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட மழையூர், கறம்பக்குடி ஆகிய 2 சரத்திற்கு உட்பட்ட கிராம பொது மக்கள் தவறாது கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று கறம்பக்குடி தாசில்தார் பிரவீனாமேரி தெரிவித்துள்ளார். நாளை மாலை 4 மணியளவில் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் குடிமக்கள் மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு தாசில்தார் பிரவீனாமேரி தெரிவித்துள்ளார்.

Tags : Jamabandhi ,Karambakudi taluk ,Karambakudi ,Pudukkottai district ,Aruna ,District Special Collector ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...