தர்மபுரி நீச்சல் குளம் முன்பு கால்வாய் சீரமைப்பு

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி- சேலம் பைபாஸ் சாலையில், இலக்கியம்பட்டி-கருவூல காலனி அருகே நீச்சல்குளம் உள்ளது. நீச்சல்குளம் முன்பு செல்லும் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் நீச்சல்குளம் முன்பு தேங்கியது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதால், நீச்சல் குளம் முன்பு கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தும், அடைப்புகளை சரி செய்தும் கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்து கடந்த 6ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தால் நேற்று, நீச்சல் குளம் முன்பு தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றும் பணி நடந்தது. கழிவுநீர் வாய்க்காலில் அடைத்திருந்த மண் கழிவுகளை பொக்லைன் மூலம்  தூர் வாரப்பட்டது. இந்த பணிகளை செயலாளர் சரவணன் பார்வையிட்டார்.

Related Stories:

>