அரூர் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு விருது

அரூர், மார்ச் 8: தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில், அருர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில், தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய சமுதாய தொண்டு, சமூக சேவை ஆய்வாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதில், அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்திற்கு, சிறப்பான சமூக சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஆவடிகுமார்  வழங்கினார். அறக்கட்டளை தலைவர் இஸ்மாயில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>