மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி மாவட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார். இதையொட்டி, தர்மபுரி மாவட்ட திமுக சார்பில் பொதுச்செயலாளர் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  நான்கு ரோடு அண்ணாசிலை அருகே, மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு திமுகவினர் அஞ்சலிசெலுத்தினர். அணிகளின் அமைப்பாளர்கள் சந்திரமோகன், ரகீம், தங்கமணி, அன்பழகன், முன்னாள் நகரமன்ற தலைவர் சிட்டி முருகேசன், மாதையன், பாபு, ரஜினி ரவி, ராஜா, முனியப்பன், சிட்டி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தர்மபுரி நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில், சுகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

குமாரசாமிபேட்டையில், முன்னாள் நகர மன்றத்தலைவர் சிட்டி முருகேசன் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர்கள் மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இண்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்றிய செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் தலைமையில், பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் வைகுந்தன், துணை செயலாளர் கண்ணன், கிருஷ்ணன், சித்ராஜ், வக்கீல் மாதன், முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் பாண்டுரங்கன், நிர்வாகிகள் முனுசாமி, தாண்டவன்,மணி, அர்ஜூனன், இளைஞரணி ராஜகோபால், மற்றொரு ராஜகோபால், செம்மொழி, கன்னியப்பன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு: பாலக்கோடு பேரூர், ஒன்றிய திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி அவரது உருவப்படத்துடன் மவுன ஊர்வலம் பாலக்கோட்டில் நடந்தது. காந்தி சிலை அருகே தொடங்கி, தாசில்தார் அலுவலகம் முன்பு முடிந்த ஊர்வலத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், பாலக்கோடு பேரூர் செயலாளருமான  பிகே முரளி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் குட்டி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முருகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜ், நிர்வாகிகள் மோகன், அமீர்ஜான், ராஜூ, மாலிக்புரான், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, பூமணி, அழகுசிங்கம், முத்துசாமி, முனியப்பன், ராமன், நவுசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடத்தூர்: கடத்தூர் திமுக பேரூராட்சி சார்பில், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் முனிராஜ், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கடத்தூர் பேரூர் செயலாளர் கேஸ்மணி, இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். காரிமங்கலம்:மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஜிட்டாண்டஅள்ளியில் ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்விடி கோபால் தலைமையில், அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், முன்னாள் யூனியன் துணை சேர்மன் யுவராஜ் முன்னாள் அவைத்தலைவர் சிவாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஓபுளி மாரியப்பன், கிருஷ்ணன் இளைஞர் அணி மாரவாடி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பட்டுகோணம்பட்டி ஊராட்சி சாமியாபுரம் கூட்டு ரோடு பகுதியில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமையில், ஊராட்சிமன்ற தலைவர் அன்பழகன், முத்துக்குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>