விழுப்புரம், மார்ச் 8: விழுப்புரம் ரஹூம்லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். விழுப்புரம் செல்லியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(43). இருவரும் நகை செய்யும் தொழிலாளிகள். நகை செய்துகொடுப்பது, வாங்குவது சம்மந்தமாக இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி நகை உருப்படி செய்து கொடுப்பதாகக்கூறி ரமேஷிடமிருந்து 68 கிராம் தங்கத்தையும், 28ம் தேதி 78 கிராம் தங்கம் என மொத்தம் 145.70 கிராம்தங்கத்தை கண்ணன் பெற்றுக்கொண்டுச் சென்றுள்ளார். ஆனால், பலநாட்களாகியும் உருப்படி செய்துகொடுக்காமல் கண்ணன் ஏமாற்றி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரமேஷ், விழுப்புரம் எஸ்பியிடம் புகார்அளித்துள்ளார்.