எஸ்ஐயை கீழே தள்ளி சரமாரி தாக்குதல்: 2 பேர் கைது

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை, காமராஜர் நகரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழாவையொட்டி வெள்ளியன்று இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு புதிய தமிழகம் கட்சி வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி இடையூறு ஏற்படுத்துவதாக பெண்கள் முறையிட்டனர். இதற்கு அவர், அந்த பெண்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

புகாரின்படி விசாரிக்க வந்த எஸ்ஐ முருகேஸ்வரனை மாரிக்கண்ணன், கிளைச்செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் தடுத்து கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதுபற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகாரின்பேரில் மாரிக்கண்ணன், தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், முனீஸ்வரன், அழகுமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: