தக்காளி, மிளகாய் செடிகளில் சார் உறிஞ்சும் பூச்சிகளை அழிக்க கரைசல் தயாரிப்பது எப்படி வேளாண் மாணவிகள் விளக்கம்

ஆண்டிபட்டி, மார்ச் 8: ஆண்டிபட்டி அருகே, ஏத்தக்கோவில் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள், தக்காளி, மிளகாய் செடிகளில் சார் உறிஞ்சும் பூச்சிகளை அழிப்பது எப்படி என விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சிலர், கிராம தங்கல் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதன்படி, ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தில் தக்காளி செடி, மிளகாய் செடி உள்ளிட்ட பல்வேறு செடிகளில் உருவாகும் சார் உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கும் கரைசல் தயாரிப்பது குறித்து நேற்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை வைத்து கரைசல் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில், கல்லூரி மாணவிகள் சங்கீதா, புவனேஸ்வரி, மெல்வின், ஆனந்தி, அனுபிரகாஷ், கனிஅமுது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: