வனவிவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

வருசநாடு, மார்ச் 8: கடமலைக்குண்டு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் வனக்கிராம பொதுமக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன் தலைமை வகித்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க தலைவர் தயாளன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் போஸ், மேகமலை ஊராட்சி தலைவர் பால்கண்ணன், கிராம முக்கியஸ்தர்கள் காசி, மணிகண்டன், வீரணன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ‘சில தினங்களாக மேகமலை, வருசநாடு வனப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்களுக்கும் வன விவசாயிகளுக்கும் வனத்துறை அதிகாரிகள் சார்பில் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். மேலும் மலைக்கிராமங்களில் விவசாயம் செய்வதற்கும் இடையூறு செய்து வருகின்றனர் என்றும், இதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், விவசாயிகள் ஒன்றுகூடி தேனி மாவட்ட வனஅலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோரை சந்தித்து வனவிவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இடையூறு குறித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.  

Related Stories: