×

பெரம்பலூர் மாவட்டத்தில் கடன் தருவதாக சமூக வலைதள விளம்பரங்களை நம்ப வேண்டாம்

 

பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: டாஸ்க் ப்ராடு டெலிகிராம் அல்லது வாட்ஸ் அப் குழுவில் இணைத்து கூகுள் மேப் ரிவ்யூவ் செய்தல், யுடியூப் வீடியோ சப்ஸ் கிரைப் செய்தல், ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்தல் போன்ற எளிய வேலைகளை டாஸ்க்காக கொடுத்து, அதற்கு லாபமாக சிறிய தொகையை கொடுத்து உங்களிடமிருந்து பணம் பறிக்கக்கூடும். உங்களுக்கு மூலமாக நம்பத் தகுந்த நபர் அல்லது குழுவில் இருந்து வரும் லிங்க்களை கிளிக் செய்தால் தேவை இல்லாத செயலிகள் உங்கள் மொபைல் போனில் டவுண்லோடு செய்யப்பட்டு உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து உங்களுக்கு தெரியாமலேயே பணம் திருடக்கூடும். லோன் ப்ராடு குறைந்த வட்டிக்குக் கடன் தருவதாக அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக வரும் விளம்பரங்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களிடம் இருந்து பணம் பறிக்ககூடும்.

கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் பெற்றால் மிக அதிக வட்டியுடன் நீங்கள் பணத்தை திருப்பி செலுத்தினாலும் உங்கள் உள்ளவர்களுக்கு உங்களின் ஆபாசமாக சித்தரித்து அனுப்பி உங்களிடம் இருந்து பணம் பறிக்ககூடும். உங்களது தனிபட்ட மற்றும் இல்லத்தாரின் புகைப்படம் மற்றும் செல்போன் எண் 1930’ என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இது போன்ற மோசடி புகார்களுக்கு www.cybercrime.gov.in-ல் புகார் செய்யவும். அல்லது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் 2வது தளத்தில் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டரை 9498190653 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு குற்றவாளியை தப்பிக்க விடாமல் விரைந்து கைது செய்ய, பாதிக்கப்பட்டோர் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags : Perambalur district ,Perambalur ,District ,Sub ,Inspector ,Manoj ,Task Broad ,WhatsApp ,YouTube ,
× RELATED சிவகாசியில் பெண்களை கேலி செய்த 3 பேர் கைது