×

டூவீலர் மீது கார் மோதி டிரைவர் பலி

 

கந்தர்வகோட்டை, ஜூன் 15: புதுக்கோட்டை மாவட்டம் அக்கச்சிபட்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன்(55). லாரி டிரைவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் தஞ்சையில் பணியை முடித்துவிட்டு இரவு டூவீலரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். கந்தர்வக்கோட்டை டோல்கேட் அருகே வந்தபோது காரைகுடியிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த வெங்கடேசன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து வந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருந்துவ கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.

Tags : Kandarvakottai ,Venkatesan ,Akkachipatti Main Road, Pudukkottai district ,Thanjavur ,
× RELATED சிவகாசியில் பெண்களை கேலி செய்த 3 பேர் கைது