×

இலங்கை சிறையில் உள்ள மீனவரை மீட்டுத்ததர அமைச்சரிடம் கோரிக்கை மனு

 

தரங்கம்பாடி, ஜூன் 15: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தரங்கம்பாடியை சேர்ந்த மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் வெங்கட்ரமணனிடம் பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடிக்கு கடந்த 5 தினங்களுக்கு முன் வருகை தந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணனிடம் மீனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தரங்கம்பாடி பக்கம் உள்ள புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வடமலை மகன் அன்புராஜ் (26).

இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் கோடியக்கரையில் மேலும் 4 மீனவர்களுடன் சேர்ந்த பைபர் படகில் சென்று கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது காற்றில் படகு திசை மாறிச் சென்றதால் இலங்கை கடற்படையினரால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 3 மாதம் கழித்து அன்புராஜ் தவிர மற்ற 4 பேரை விடுதலை செய்தனர். அன்புராஜ் படகின் டிரைவர் என்று கூறி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அன்புராஜை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Lankan ,Tharangambadi ,Minister ,Venkatramanan ,Food Department ,Tharangambadi, ,Mayiladuthurai district ,
× RELATED சிவகாசியில் பெண்களை கேலி செய்த 3 பேர் கைது