×

முன்னாள் படைவீரர்களுக்கு 23ம்தேதி குறைதீர்க்கும் கூட்டம்

 

அரியலூர், ஜூன் 15: அரியலூர் கலெக்டர் மிருணாளினி செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 23ம்தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டர் அவர்களிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனு மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இருபிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur ,Collector ,Mrinalini ,Ariyalur district ,
× RELATED சிவகாசியில் பெண்களை கேலி செய்த 3 பேர் கைது