×

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!

சென்னை: முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. விவாகரத்து கோரி கடந்த டிசம்பரில் சங்கீதா மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 20ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக விவாதிக்கப்பட்ட நிலையில் தான் முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, இது குடும்ப நல வழக்கு என்பதால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அதோடு கடந்த ஏப்.20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஜய்யும், சங்கீதாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதையடுத்து தேர்தல் பணிகள் காரணமாக முதலமைச்சர் விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Tags : Chief Minister ,Vijay ,Sangeetha ,Chennai ,Vijay-Sangeeta ,Chengalpattu Family Welfare Court ,Sangeeta ,
× RELATED மத்தியப் பிரதேசம்: தண்டவாளத்தில்...