போபால்: மத்தியப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலிலிருந்து தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் மீது விரைவு ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலிலிருந்து பலரும் தண்டவாளத்தில் இறங்கிய நிலையில் எதிரில் வந்த பெரோஸ்பூர்-சியோனி பாதாள கோட் விரைவு ரயில் மோதி ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
