×

உடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை

உடுமலை, மார்ச் 8: உடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற  தேர்தல் வரும் ஏப்ரல் 6தேதி நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் விநியோகத்தை தடுக்க பறக்கும்படைகள்  அமைத்து கண்காணித்து வருகின்றனர். ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்துச்சென்றால் உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நேற்று மூணாறு சாலை ஒன்பதாறு செக்போஸ்ட் அருகே உதவி வேளாண்மை இயக்குநர் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனை நடத்தினர். ஏப்ரல் 6ம் தேதி கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் இரு மாநிலங்கள் இடையே பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்படுகிறதா என கண்காணிப்பில் ஈடுபட்டனர். உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் இதுவரை நடந்த சோதனைகளில் பணம், பரிசுப் பொருள் எதுவும் சிக்கவில்லை. இதுபற்றி தேர்தல் பிரிவினர் கூறுகையில், தற்போது ஆன்லைன் முறையில் அதிகளவில் பணப்பரிவர்த்தனை நடக்கிறது. மேலும் நடத்தை விதிமீறினால் பணத்தை திரும்ப பெற சிரமப்பட வேண்டி இருக்கும் என்பதால், பலரும் முன்எச்சரிக்கையாக அதிகளவு பணத்தை எடுத்துச்செல்வதை தவிர்க்கின்றனர் என்றனர்.

Tags : Udumai ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் ஒருவர் கைது