×

தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்

திருப்பூர், மார்ச்  8: திருப்பூர், பல்லடம் ரோட்டிலுள்ள தென்னம்பாளையம், மீன்மார்க்கெட்டில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருப்பூர், பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க திருப்பூர், வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பெரியார் நகர், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தினசரி வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் மீன்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் வந்தனர். இதனால் மீன்கள் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், மீன்கள் வாங்க கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், இந்த வாரம் மீன்கள் வரத்தும் சற்று உயர்ந்து உள்ளது. வெயில் காலம் தொடங்கியதால் பொதுமக்கள் மீன்களை பெரிதும் விரும்பி உண்கிறார்கள். இந்த வாரம் மீன்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது, என்றனர்.

Tags : Thennambalayam market ,
× RELATED திருப்பூர் அரசு மருத்துவமனை...