பராமரிப்பில்லாத பூங்கா

திருப்பூர், மார்ச் 8: திருப்பூர் குமரன் நினைவு பூங்கா உரிய பராமரிப்பில்லாமல் உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் பனியன் தொழில்கள் அதிகம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் பெரிய அளவிற்கு சுற்றுலா தளங்கள் இல்லாத போதிலும் பெரும்பாலன பொதுமக்கள் திருப்பூர் குமரன் (வெள்ளி விழா) நினைவு பூங்காவிற்கு வந்து தங்களது விடுமுறையை கழித்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தினால் கடந்த மார்ச் மாதம் திருப்பூர் குமரன் நினைவு பூங்கா மூடப்பட்டது. அதன் பின்பு கடந்த 11 மாதங்கள் கழிந்த நிலையில் திருப்பூர் குமரன் நினைவு பூங்கா திறக்கபட்டது.

பூங்கா திறந்த பின்னர் அதிகப்படியான பொதுமக்கள் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். ஆனால் திருப்பூர் குமரன் நினைவு பூங்கா உரிய பாராமரிப்பில்லாமல் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல்கள் உடைந்த நிலையிலும், குப்பைகள் அகற்றப்படாமலும் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் திருப்பூர் குமரன் நினைவு பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Related Stories: