வெடி பொருட்கள் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

பாலக்காடு, மார்ச் 8: பாலக்காடு அருகே உள்ள பழனியார்ப்பாளையத்தில் கடந்த 3ம் தேதி கொழிஞ்சாம்பாறை போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.  காரில் வெடி பொருட்கள் இருந்ததையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு காரில் உரிய ஆவணங்கள் இன்றி வெடிப்பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்து. ஏற்கனவே திருத்தாலாவை அடுத்த கேரளச்சேரியைச் சேர்ந்த ஷேக்இமாமுதீன் (37) கல்லேக்காட்டைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த வடிவேல் (38) என்பவரிடம் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, நேற்று வடிவேலை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>