நீலகிரியில் ரூ.6.69 லட்சம் பறிமுதல்

ஊட்டி, மார்ச் 8: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு  நீலகிரியில்  உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு, தலா 3 என மொத்தம் 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் நேற்று கூடலூர் தொகுதியில் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சத்து 15 ஆயிரமும், குன்னூர் தொகுதியில் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 500ஐ என நேற்று ஒரே நாளில் ரூ.6.69 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மூலம் கடந்த 9 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 51 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.71 லட்சத்து 7 ஆயிரத்து 200 மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 12 பேருக்கு ரூ.22 லட்சத்து 7 ஆயிரத்து 500 திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளிலும் சேர்ந்து நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 592 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த ஒருவருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: