நெமிலி தாலுகா அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரியாக தாக்கிய விஏஓ

நெமிலி: நெமிலி தாலுகா அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரை விஏஓ சரமாரியாக தாக்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக கிருஷ்ணமூர்த்தி(53) உள்ளார். இவர் நேற்று நெமிலி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த வெளிதாங்கிபுரம் விஏஓ கருத்திருமன், ‘கிராமத்தில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் எனக்கு தகவல் சொல்ல மாட்டாயா’ என்று கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டு வாக்குவாதம் செய்தாராம்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் கருத்திருமன், கிருஷ்ணமூர்த்தியை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்தியின் சட்டை பாக்கெட் கிழிந்து லேசான காயமடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த துணை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் விஏஓ கருத்திருமனை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: