- மதுரா
- மதுரை
- ரமேஷ்
- மதுரை வரிச்சியூர் வைதியநாதபுரம்
- பிரேமலதா
- ராணி வர்த்தகம்
- மதுரை மாட்டிறைச்சி பஸ் நிலைய
மதுரை: மதுரை வரிச்சியூர் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி பிரேமலதா. இவர்கள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் குயின்ஸ் டிரேடிங் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் வர்த்தக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
அதனை நம்பிய பலரும் ரூ.10 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் செல்லூரை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் மட்டுமே ரூ.1.03 கோடி முதலீடு செய்துள்ளார். இவர் செய்த முதலீடுக்கு சிறிது காலம் பணத்தை திரும்ப கொடுத்து வந்துள்ளனர். மீதி பணத்தை தராமல் மோசடி செய்ததாக மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் மகேஸ்வரி புகார் செய்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேல் விசாரணைக்காக மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் பிரேமலதா, ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, ‘‘குயின்ஸ் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து திரும்ப கிடைக்காத நபர்கள் யாராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம்’’ என்றனர்.
