மஞ்சூர் அரசு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

மஞ்சூர், மார்ச் 8: மஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளி 92 ஆண்டுகள் பழமையானது. இப்பள்ளியில் படித்த பலரும் வெளிநாடுகள், வெளி மாவட்டங்களில் அரசு, தனியார் துறைகள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 1976 முதல் 1981ம் ஆண்டு வரை இப்பள்ளியில் ஒன்றாக படித்த மாணவ, மாணவிகள் பல இடங்களில் வசித்து வந்த நிலையில் செல்போன், வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு நட்பை புதுப்பித்தனர். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் தாங்கள் படித்த அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று வகுப்பறைகளை பார்வையிட்டனர்.

பள்ளியில் மாணவர்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி இல்லாமல் இருந்ததை கண்டு தேவையான பென்ச் மற்றும் டெஸ்குகளை வழங்குவதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று முன்னாள் மாணவர்கள் சைனுதீன், ராமு, முருேகஷ், பஷீர், ராஜன், சுதாகர், லதாமகேஸ்வரி, சுமதி, ஷர்மிளா, விஜயா, ராஜாத்தி உள்ளிட்ட குழுவினர், பள்ளி தலைமையாசிரியை பார்வதியிடம் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பென்ச், டெஸ்க் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் சேர்களை வழங்கினார்கள்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டானர். முன்னதாக, பள்ளிக்கு பொருட்களை வழங்கிய முன்னாள் மாணவர்களை தலைமையாசிரியை பார்வதி மற்றும் உதவி ஆசிரியர் அருண்பிரபு ஆகியோர் வரவேற்றதுடன் படித்த பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கிய முன்னாள் மாணவர்களை பாராட்டினார்கள்.

Related Stories:

>