மண், நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்ப பயிற்சி முகாம்

ஊட்டி, மார்ச் 8: ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், தட்பவெப்ப நிலைக்கேற்ற விவசாயம் என்ற தலைப்பில் 12 நாள் தேசிய அளவிலான இணையவழி பயிற்சி முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. முதன்மை விஞ்ஞானி ராஜா வரவேற்று பேசினார். இயக்குநர் யாதவ், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயம் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப முறைகள் குறித்தும், உர கொள்கையை உருவாக்குவதற்கான தேவை குறித்தும் பேசினார்.

பேராசிரியர் சக்ரவர்த்தி ஒருங்கிணைந்த முன்கூட்டிய தொழில்நுட்பங்களான நானோ அறிவியல், டிரோன் மேப்பிங், மீளுருவாக்கம் செய்யும் விவசாயம், மண் வளம் பாதிப்பு, மண் ஆரோக்கியம் குறித்து பேசினார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் விஞ்ஞானி தேபப்பிரியா தத்தா முன்னிலை வகித்து, நிலையான விவசாயம், இலக்குகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம் குறித்து பேசினார். ஊட்டி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கண்ணன், பருவநிலை மாற்றத்திற்கேற்ப மனித வள மேம்பாட்டு கருவிகள், முறைகள், மண், நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார். இதில் 12 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த 52 பயிற்சி பெறுநர்கள் பங்கேற்றனர். முடிவில் மூத்த விஞ்ஞானி ேஹாம்பே கவுடா நன்றி கூறினார்.

Related Stories: