ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா தடுப்பூசி

கோவை, மார்ச் 8: கோவையில் 25 அரசு மருத்துவமனைகள், 79 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை தொடர்ந்து மார்ச் 1-ம் தேதியில் இருந்து பொது மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக பொது மக்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், 45 முதல் 59 வயதுள்ளவர்களில் இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,`கோவையில் பொது மக்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். கோவையில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்’ என்றனர்.

Related Stories:

>