×

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

கோவை, மார்ச் 8: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாநில செயலாளர் உதயகுமார், கோவை மாவட்ட தலைவர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், பவானிசாகர், எஸ்.எஸ்.குளம், அன்னூர் மேற்கு வட்டாரங்களில் உள்ள குளம் குட்டைகளில் நீர் எடுக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

ஆனைமலையாறு நல்லாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் உட்பட தென்னிந்திய நதிகள் அனைத்தையும் இணைக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். தேசிய வங்கி கடன் உட்பட அனைத்தையும், எந்த விதமான பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் சேதம் செய்யும் வனவிலங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு சட்டப்படி அனுமதி வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...