மயானம் சீரமைக்க ரூ.40 லட்சம் செலவு

கோவை, மார்ச் 8: கோவை மாநகராட்சியில் ஆத்துப்பாலம், சொக்கம்புதூர், பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம் பீளமேடு, உப்பிலிபாளையம் உட்பட 80 இடத்தில் மயானம், சுடுகாடு உள்ளது. இந்த மயானம், சுடுகாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. சடலத்தை அடக்கம் செய்ய வருபவர்கள், முட்புதர்களை வெட்டி அகற்றி குழி தோண்ட படாதபாடு பட வேண்டி உள்ளது. மாநகராட்சி சுடுகாடு, மயானங்களை ஆண்டிற்கு இரு முறை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டாக எந்த மயானமும் சீரமைக்கப்படவில்லை. தினமும் 6 முதல் 10 சடலம் அடக்கம் செய்யப்படும் ஆத்துப்பாலம் மாநகராட்சி மயானத்தின் பெரும்பகுதியில் முட்புதர் படர்ந்து காணப்படுகிறது. பாம்பு, தேள் உள்ள இந்த வளாகத்தில் புதர் மண்டியதால் சடலம் அடக்கம் செய்ய இடம் கிடைக்காத நிலையிருக்கிறது.

புலியகுளம் மாநகராட்சி மயானமும் இதே நிலையில் தான் உள்ளது. சொக்கம்புதூர்  மயானம் கடந்த சில ஆண்டாக சீரமைக்கப்படவில்லை. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டில் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில், நகரில் உள்ள மயானம், சுடுகாடுகளை சீரமைத்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளதாக தெரிகிறது. எந்த வேலையும் நடக்காமல் எப்படியோ  செலவு கணக்கு காட்டுகிறார்கள். சடலம் புதைக்கும் இடங்களிலும் இப்படியெல்லாமல் செய்கிறார்களே என மக்கள் புலம்பி வருகின்றனர்.

Related Stories: