×

அவசிய திட்டங்களை செய்யாம ஏமாத்திட்டாங்க...

கோவை, மார்ச் 8: ேகாவை மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்யாமல் ஆளுங்கட்சியினர் ஏமாற்றி விட்டதாக ெபாதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க மக்களுக்கான திட்டங்களை முறையாக,  நிறைவேற்றவில்லை. குறிப்பாக, உள்கட்டமைப்பு, தொழில், விவசாய வளர்ச்சிக்கான திட்டங்களை ஆளுங்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணி முடங்கி விட்டது. விவசாய நிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பு, உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்தல், புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துதல், உரம், விதைகள் தொடர்பான பிரச்னை, காட்டு பன்றி, யானைகளால் ஏற்படும் பயிர் இழப்பு, செங்கல் சூளைகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் சூழல் மாசு, கிராவல் மண் கடத்தல், கிரஷர்களின் விதிமுறை மீறல், விவசாய கருவிகள் வழங்காமல் முடக்கி வைத்தல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளுங்கட்சியினர் தீர்வு காணவில்லை.

தண்ணீர், நிலம் இருந்தும் மகசூல் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பெயரளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்து ஆளுங்கட்சியினர் ஏமாற்றி விட்டதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். தக்காளி மார்க்கெட், திராட்சை பதப்படுத்தும் கூடம், காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை மேம்பாடு திட்டம் முடங்கி போய் விட்டது. மாவட்ட அளவில் கூட்டுறவு துறையினர் மலிவு விலை காய்கறி கூடங்கள் மூடப்பட்டது. ஆளுங்கட்சியினரிடம் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலங்கள் மனைப்பிரிவுகளாக மாறி விட்டது. ஆனால், விவசாயத்தை காப்பாற்றியதாக ஆளுங்கட்சியினர் போக்கு காட்டி வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

மாவட்ட அளவில் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 5 ஆண்டில் தொழில் துறைக்கான கட்டமைப்பை ஆளுங்கட்சியினர் மேற்ெகாள்ளவில்லை. குறிப்பாக, ஐ.டி பார்க் முடங்கும் நிலையில் இருக்கிறது. கோவையில் தொழில் செய்து வந்த பல தொழில் நிறுவனங்கள் ஊரை விட்டு சென்று விட்டது. குறிப்பாக, கணபதி, சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சிட்கோ, மலுமிச்சம்பட்டியில் இருந்த குறுந்ெதாழில் நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு இன்றி ெதாடர்ந்து நடத்த முடியாத நிலையில் தவிக்கிறது. உதிரிபாகங்கள் உற்பத்தி, பெரிய ெதாழில் நிறுவனங்களுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. கோவையில் புதிய தொழில்கூடங்கள் துவங்குவதும் அரிதாகவே இருக்கிறது.

கோவை மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் (டேக்ட்) ஜேம்ஸ் கூறுகையில்,‘‘5 ஆண்டில் சுமார் ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் முடங்கி போய் விட்டன. சிலர் தொழிலை கைவிட்டு வேறு வேலைக்கு போய் விட்டார்கள். நாங்கள் பல ஆண்டாக தனி நல வாரியம் கேட்டு வருகிறோம். இது நிறைவேறவில்லை. தொழில் பேட்டை கேட்டும் கிடைக்கவில்லை. கொரோனா காலத்திற்கு பிறகு ஜாப் ஆர்டர் கணிசமாக பாதிக்கப்பட்டது. எங்களின் எதிர்பார்ப்பை ஆளுங்கட்சியினர் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவில்லை’’ என்றார்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி