×

நிலுவை பணிகளை விரைந்து முடித்து விழுப்புரம் நகரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்

*ஆய்வுக்கூட்டத்தில் லட்சுமணன் எம்எல்ஏ உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, பாதாளசாக்கடைதிட்டப்பணிகள், சுகாதாரப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் லட்சுமணன் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

சேர்மன் தமிழ்ச்செல்விபிரபு, நகராட்சி ஆணையர் ஷியாமளா, பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நலஅலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு லட்சுமணன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் நகராட்சியில் ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.

முதல்கட்டமாக தேர்தலுக்கு முன்பு 29 கி.மீ தூரம் சாலைவசதிகள் கிட்டதட்ட 235 சாலைகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி 130 சாலைகள் நிறைவடைந்துவிட்டன. 105 சாலைகள் 12கிலோ மீட்டர் அளவில் நிலுவையில் உள்ளன. மிகவிரைவில் அந்த சாலைகள் முடிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பாதாளசாக்கடை நிரம்பி வழியும் பகுதிகளில் வரும் புகார்கள் குறித்து ஒப்பந்ததாரரை அழைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பிரச்னைகளை முற்றிலும் தீர்வுகாணும் வகையில் புதிய இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்து சீரமைப்புபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

விழுப்புரத்தை சுத்தமான, சுகாதாரமான நகரமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வுக்கூட்டத்தை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாககூறினார்.

நகரமன்ற உறுப்பினர்கள் மணவாளன், புருஷோத்தமன், சாந்தராஜ், ஜனனிதங்கம், புல்லட்மணி மற்றும் திமுக தொண்டரணி அமைப்பாளர் கபாலி, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Villupuram ,Lakshmanan MLA ,Villupuram Municipality ,Tamilselviprabhu ,Municipal Commissioner ,Shyamala ,Engineer ,Bhuvaneswari ,Urban Development Officer ,Sripriya ,
× RELATED சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு...