கோபியில் ஆவணமின்றி கொண்டு வரபட்ட ரூ.4.12லட்சம் பறிமுதல்

ஈரோடு, மார்ச் 8: கோபி-சத்திரோட்டில் மூலவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் அன்பழகன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காஞ்சிக்கோவில் மேற்கு ரத வீதியை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவர் ஓட்டி வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், சிமெண்ட் விற்பனை செய்த நிலுவை தொகையை வசூல் செய்து கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்காததால், அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோபி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், கடந்த 5ம் தேதி நம்பியூர் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் ரூ.4 லட்சமும், பவானி-கவுந்தப்பாடிரோடு தயிர்பாளையம் பிரிவு பகுதியில் ரூ.97 ஆயிரம் என ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.6 லட்சத்து 9ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களது அதிகபட்ச பணப்பரிவர்த்தனையை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுஇடங்களுக்கு செல்லும்போது உரிய ஆவணங்களுடன் பணத்தை கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு 18004250424 மற்றும் 1950 ஆகிய இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 0424 2257901, 2256782, 2251863, 2256524 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: