- நீதமங்கலம் நகராட்சி
- நீடாமங்கலம்
- நீடாமங்கலம் மாவட்டம்
- நகர சபை
- திருவாரூர் மாவட்டம்
- மேயர் நிர்வாக அதிகாரி
- கண்ணன்
நீடாமங்கலம், ஜூன் 13: நீடாமங்கலம் பேரூராட்சியில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் பேரூராட்சியின் இயக்குனர் உத்தரவுபடி, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.
அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமாற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர்கள் சீதாராமன், கீர்த்தனா, உதவி சுகாதார அலுவலர் வீரமணி மற்றும் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
