திருத்துறைப்பூண்டி, ஜூன் 13: திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாக அலுவலகம் அருகில் உள்ள அலுவலக கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்ட மூலம் சமையல் செய்யப்படுகிறது. இங்கு சமையல் செய்யப்படும் உணவு, திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இங்கிருந்து வாகனம் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சமையல் கூடத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு காலை உணவு சரியான நேரத்திற்கு செய்யப்படுகிறதா சரியான நேரத்தில் அனுப்பப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
