×

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை

அரியலூர், ஜூன் 13: குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, காவல் துறை மற்றும் குழந்தைகள் உதவிமையம் 1098 ஆகியோர் இணைந்து அரியலூர் மாவட்டத்தில் கடைகள் மற்றும் பட்டறைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா என கூட்டாய்வு மேற்கொண்டனர்.

மேலும் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, விழிப்புணர்வு தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்துவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் அல்லது 6 முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்க குழந்தை தொழிலாளர் தடைச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட பாடுபட வேண்டும். அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் மிருணாளினி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags : Ariyalur ,District Child Protection Unit ,Labour Welfare and Skill Development Department ,District Legal Services Commission ,Police Department ,Child Helpline 1098 ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு