- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
- அரியலூர்
- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உலக தினம்
- மாவட்ட ஆட்சியர்
அரியலூர், ஜூன் 13: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
பின்னர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் “குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க ஒன்றிணைவோம்!” கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
