கொள்ளிடம், ஜூன் 13: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இடையிடையே அதிக காற்றும் வீசி வருகிறது. வறண்ட வானிலை காணப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை வானம் இருண்டு மழை பெய்ய துவங்கியது.
சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல் நேற்றும் மாலை 3 மணி அளவில் இருண்ட மேகத்துடன் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
