×

மதுபான கடத்தலை தடுக்க அதிகாரிகள் குழு நியமனம்

திருச்சி, மார்ச் 7: சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுத்திட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் உள்ளபோது திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை கடத்தல் நடைபெற்றால் அதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மற்றும் மதுபானக்கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பு அலுவலராக (நோடல் ஆபீசர்) டாஸ்மாக் உதவி மேலாளர் தாசில்தார் ரவிசங்கர் (செல்: 8190890912) நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி டாஸ்மாக் உதவி மேலாளர் அர்ஜுன் பறக்கும் படை அலுவலராக (90421 68727) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார். இவரது குழுவில் இளநிலை உதவியாளர்கள் மணிவேல் (99425 75662), நாகூர் (98652 78511), ஞானக்குமார் (95005 33349), இளங்கோவன் (82705 30421), சரவணன் (89406 58865) ஆகியோர் உள்ளனர். மேலும் பொதுமக்கள் மதுபானம் கடத்தல் ஏதும் நிகழ்வின் அது தொடர்பான புகார்களை மேற்குறிப்பிட்ட அலுவலர்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தனிவாரியம் அமைக்க கோரி சமயபுரம்...